மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கை புதிய சர்ச்சை!

38
0
Spread the love

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலகொடஅத்தே ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டது தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கை அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தற்போதைய சூழலில் தேரரின் விடுதலைக்காகக் கொழும்பில் தொடரும் போராட்டங்களுக்கு இந்த அறிக்கை மறைமுகமாக வலு சேர்ப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த கால ஆட்சியில் தான் வழங்கிய பொதுமன்னிப்பு உயர் நீதிமன்றத்தினால் செல்லுபடியற்றதாக்கப்பட்டமைக்குத் தனது அலுவலக அதிகாரிகளின் தொழில்நுட்பக் குறைபாடே காரணம் என மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்விதத் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் வழங்கப்படவில்லை எனவும், மாறாக நிறைவேற்று அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியலமைப்பு மீறப்பட்டமையே அதற்குக் காரணம் எனவும் சட்ட நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

குறிப்பாக, மனுதாரர்கள் மற்றும் வழக்கு எண்கள் குறித்த விடயங்களில் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் சில தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும், இது மக்களைத் திசைதிருப்பும் நோக்கம் கொண்டவை எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் தொடரும் இத்தகைய சர்ச்சைகள் நாட்டில் புதிய அரசியல் மற்றும் சமூக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here