கொள்கலன்கள் விடுவிப்பு விசாரணை குழுவின் காலம் நீடிப்பு

44
0
Spread the love

கொழும்பு துறைமுகத்தில் உரிய பௌதீகப் பரிசோதனைகள் எவையும் நடத்தப்படாமல் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற செயற்குழுவின் செயற்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் போதாமையால், அதன் நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக வரும் டிசம்பர் மாதம் வரை காலத்தை நீட்டிப்பதற்கான பிரேரணையை ஆளும் தரப்பின் பிரதான கொறடா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்க உள்ளார்.

துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விவகாரம் தொடர்பான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு உரிய பரிந்துரைகளையும் விதப்புரைகளையும் நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்காகவே இந்தக் குழு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here