இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்படவுள்ள நுரைச்சோலை மின் பிறப்பாக்கி

59
0
Spread the love

நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கி இன்று (13.06) நள்ளிரவு முதல் பராமரிப்பு பணிகளுக்காக 25 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் என்ற போதிலும் 2 மின் பிறப்பாக்கிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதால் மின்சக்தி விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். 

3வது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நுரைச்சோலை மின்நிலையத்தின் 1வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. 

இதேவேளை, கடந்த ஒன்றரை மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம், அடுத்த சில நாட்களில் மின்சக்தி உற்பத்திக்காக மீண்டும் இணைக்கப்படவுள்ளது. 

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 165 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here