புறப்பட்ட சில நொடிகளிலேயே மோதி வெடித்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி

84
0
Spread the love

ஏர்இண்டியா விமான விபத்தில் குறைந்தது 200 பேர் உயிரிழந்ததாக இந்திச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் லண்டனை நோக்கிப் பயணத்தை தொடங்கிய போயிங் 787-8 புறப்பட்ட சில நொடிகளிலேயே மருத்துவர்கள் தங்கும் விடுதி ஒன்றின் மீது மோதி நொறுங்கியது.

இந்நிலையில், 11A இருக்கையில் இருந்த பிரித்தானியக் குடியுரிமை கொண்ட விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்னும் ஒரு பயணி உயிர் தப்பியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வரும் அவர், இந்திய ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

“விமானம் புறப்பட்ட 30 விநாடிகள் கழித்து ஒரு பெரும் சத்தம் கேட்டது. பின்னர் விமானம் கீழே விழுந்தது. எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

அவர் தனது பெயரும் இருக்கை எண்ணும் காட்டும் போர்டிங் பாஸை ஊடகங்களிடம் பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

ஏர்இண்டியா தரப்பில் வெளியான தகவலின்படி, அந்த கேட்விக் விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானிய குடியுரிமையாளர்கள், 7 போர்ச்சுகீசியர் மற்றும் 1 கனேடியர் இருந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here