சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது இன்று (12) மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
விமான நிலையத்தின் நான்காவது முனையத்தை இலக்காகக் கொண்டு அடையாளம் காணப்படாத எறிகணை தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர் பாகிஸ்தானியப் பிரஜை என சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகளும் விமான நிலையப் பாதுகாப்புப் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முந்தைய நாளில், அதே விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 309 பேர் காயமடைந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.







