ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தில் மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இறுதி ஊர்வலம் நாளை தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் உள்ள கிராண்ட் மொசல்லா வளாகத்தில், அலி கமெனிக்கான
பொது இறுதி அஞ்சலி இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகிறது.
கோடைக்காலத்தின் கடும் வெப்பத்திலும், ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஞ்சலியில் கலந்து கொண்ட மக்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கடும் கோபத்தை பதாதைகளிலும்
கோஷங்களிலு வெளிப்படுத்தியுள்ளனர்.







