திருக்கோவிலில் T-56 மற்றும் LMG ஆயுதப் பாகங்கள் மீட்பு

19
0
Spread the love

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து T-56 ரகத் துப்பாக்கிகளின் பாகங்கள் மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் (LMG) பாகங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்னால் அமைந்துள்ள குறித்த கிணற்றில் ஆயுதப் பாகங்கள் இருப்பதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக திருக்கோவில் பொலிஸார் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, 9 T-56 ரகத் துப்பாக்கித் தோட்டாக்கூடுகள், போல்ட்கள் உள்ளிட்ட 3 T-56 துப்பாக்கிப் பாகங்கள் மற்றும் 6 LMG ஆயுதப் பாகங்கள் அல்லது தோட்டாக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லலிந்த பீரிஸின் தலைமையில், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட ஆயுதப் பாகங்கள் எவ்வாறு அங்கு வந்தன என்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here