உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு, நாட்டின் சமாதானம் கருதி 543வது படைப்பிரிவினரின் மாபெரும் செய்த இரத்த தான முகாம் இன்று (14.06) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம். ஹனீபா,
மன்னார் நகர பிரதேச செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் கில் றோய் பீரிஸ்,மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் சமந்த விஜயரத்தின, உள்ளடங்களாக ராணுவ அதிகாரிகள்,சிப்பாய்கள் வைத்தியர்கள்,மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட தள்ளாடி,கள்ளியடி,மாதோட்டம்,பேசாலை ஆகிய இராணுவ முகாம்களை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் குருதிக்கொடை வழங்கினர்.






















