மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக உள்ளதாகவும,ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் தங்களுடன் இணைந்து சபை அமைக்க முன் வருவார்கள் என நம்புவதாகவும் முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று (16.06) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகள் அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளுராட்சி ஆணையாளரினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்கமைய, மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 24 ஆம் 25 ஆம் திகதிகளில் 5 சபைகளுக்கான தவிசாளர்கள் தெரிவு செய்கின்ற நடவடிக்கை இடம்பெறவுள்ள நிலையில்,
மக்களுக்கும் மற்றைய கட்சிகளுக்கும் ஒரு விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தவும் கோரிக்கை விடுக்கும் முகமாகவும் இந்த ஊடக சந்திப்பை மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.
மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயல் படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன் வருவார்கள் என நம்புவதாக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்






