நாட்டின் பல பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு!

40
0
Spread the love

இன்று (22) இலங்கையை அண்மித்த வளிமண்டலப் பகுதியில் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளமையால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் கடல் பிராந்தியங்களிலும் மழையின் தாக்கம் தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன் தாக்கத்தின் காரணமாக, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகலுக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here