நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை பெய்யக்கூடும்

7
0
Spread the love

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலை காணப்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here