யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துச் சேகரிப்பு – திடீர் பணக்காரர்கள் 18 பேர் பொலிஸ் விசாரணை வலயத்தில்!

3
0
Spread the love

யாழ்ப்பாணப் பகுதியில் குறுகிய காலத்திற்குள் பெருமளவிலான சொத்துக்களைக் குவித்துத் திடீர் பணக்காரர்களாக மாறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 18 பேர் பொலிஸ் விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் இன்று (05.11.2026) வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் கடத்தல், மீட்டர் வட்டி மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமாகக் குறுகிய காலத்தில் பெருமளவிலான பணம் மற்றும் சொத்துக்களைச் சம்பாதித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நபர்களின் சொத்து விபரங்கள் மற்றும் அவற்றைச் சம்பாதித்த முறைகள் குறித்துப் பொலிஸார் தொடர்ச்சியான புலனாய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிலரின் சொத்து விபரங்களைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கமையத் தமது சொத்துக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை உரிய முறையில் சமர்ப்பிக்காத நபர்களின் சொத்துக்களைச் சட்ட நடவடிக்கைகளின் ஊடாகப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here