சவுதியில் 14 வருடங்களாகக் காணாமல் போன இலங்கைப் பெண்; தந்தை கண்ணீர் கோரிக்கை

16
0
Spread the love

அம்பன்பொல, செருகொடப் பகுதியைச் சேர்ந்த நிலுகா ராஜபக்ச என்ற இலங்கைப் பெண், கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியன்று வேலைவாய்ப்புக்காகச் சவுதி அரேபியாவிற்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், கடந்த 14 வருடங்களாக எவ்விதத் தகவலுமின்றித் தொடர்ந்து காணாமல் போயுள்ளார். வெளிநாடு சென்றடைந்த நாள் முதல் தனது மகள் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எவ்விதத் தொடர்பும் கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பலமுறை முறைப்பாடு செய்துள்ளதாகவும் காணாமல் போன பெண்ணின் 73 வயதுடைய தந்தை கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தந்தை ஊடகங்களிடம் தெரிவிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குப் பலமுறை நேரில் சென்றும் கடிதங்கள் மூலமாகவும் முறையிட்டதுடன், அண்மையில் தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்திற்கும் முறைப்பாடு அனுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரை எந்தவொரு சாதகமான தகவலும் கிடைக்கவில்லை என்றும், வறுமை மற்றும் உடல்நலக் குறைவினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தான் தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here