மன்னார், முசலி பிரதேசத்திற்குட்பட்ட முள்ளிகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 100 மெகாவாட் (MW) திறன் கொண்ட காற்றாலை மின்சாரத்தைத் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் 220kV இரட்டைச் சுற்றுப் பரிமாற்றப் பாதையின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. எரிசக்தி, சிவில் விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அநுர கருணாதிலக அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.11.2026) இதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் மூலம் பூர்த்தி செய்யும் தேசிய இலக்கிற்கு அமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

NTNSP நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டது. புதைபடிவ எரிபொருட்களிலான தங்கியிருக்கும் நிலையைக் குறைத்து நாட்டின் ஒட்டுமொத்த எரிசக்திச் செலவீனங்களை வீழ்ச்சியடையச் செய்வதும், வடக்கு மாகாணத்தின் மின் வலையமைப்பு உறுத்தன்மையை (Grid Stability) பலப்படுத்துவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், முசலி பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதியமைச்சரின் செயலாளர்கள், பிரஜாசக்தி தலைவர்கள், பிரதேச மக்கள் மற்றும் துறைசார் பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.













