அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
அனுராதபுரம் புனித நகர அபிவிருத்திக்கான புதிய திட்டத்திற்குத் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருவதுடன், அத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், விகாரை வளாகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே இவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.







