மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்றைய தினம் (12) பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடிமின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் த தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் அதிகாலை வேளையில் பனிமூட்டமான சூழ்நிலை நிலவக்கூடும் எனவும், கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்







