நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பிரதான கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்து சிறிய அளவிலான வெள்ள அபாய நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு, மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பதிவான மழைவீழ்ச்சி காரணமாக நில்வளா, களு, கின்கங்கை மற்றும் அத்தனகலு ஓயா உள்ளிட்டவற்றின் தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மழையின் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படலாம் எனவும், தாழ்நிலப் பகுதிகள் திடீரென நீரில் மூழ்கும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆறுகளை அண்மித்து வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







