சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் எனவும், அநுராதபுர புனித பூமியின் அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திப் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (12) இரண்டாவது நாளாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக எந்தவித உணவோ அல்லது நீராகாரமோ அருந்தாமல் தொடரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துத் திரளான பொதுமக்களும் ஏனைய தேரர்களும் நேற்று இரவும் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர். நாட்டின் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் போராட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்ந்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







