நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் பருவமழை காரணமாக நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் extreme அளவில் அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை சுமார் 7,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் துஷாரி டபரெர தெரிவித்துள்ளார். குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய விவசாய மற்றும் மகா பருவச் செய்கை நடவடிக்கைகளின் காரணமாக சேறு மற்றும் நீர்நிலைகளில் வேலை செய்யும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சலால் ஆண்டுதோறும் சுமார் 300 பேர் வரை உயிரிழப்பதாகவும், காய்ச்சல், தீவிர தலைவலி, தசைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்







