எரிபொருள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை -எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி

52
0
Spread the love

இலங்கையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 

நாட்டில் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால்
பொதுமக்கள் தேவையற்ற வகையில், எரிபொருள் நிலையங்களில் கூட வேண்டாம் எனவும் அத்துடன், வீடுகளில் எரிபொருளினைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள போர் நிலை காரணமாக  சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கையிலும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதி பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்  வரிசை கட்டி நிற்பது சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here