அடுத்த மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரியுள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், தற்போது பேருந்து கட்டண திருத்தம் செய்வது தொழில்துறைக்குப் பாதகமானது என அவர் தெரிவித்துள்ளார்.







