கஸ்ஸப தேரருக்குக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராக உத்தரவு

51
0
Spread the love

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் திடீர் அமைதியின்மையும் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்கும் அங்கு வருகை தந்த மற்றுமொரு குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தையே இந்தப் பதற்ற நிலைக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த போராட்டக் களத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here