இந்திய உதவியுடன் அடுத்த ஆண்டு முதல் 100 புதிய அம்பியுலன்ஸ் வண்டிகள் சேவையில் இணைப்பு

39
0
Spread the love

நாட்டின் 1990 சுவசேரிய அம்பியுலன்ஸ் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசின் உதவியின் கீழ் அடுத்த ஆண்டு முதல் புதிதாக 100 அம்பியுலன்ஸ் வண்டிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். தற்போது 319 அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த அவசரகால மருத்துவ சேவைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவசரகால மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்தி நாட்டு மக்களுக்கு விரைவான சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here