நாட்டின் காலநிலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை உள்ளடக்கிய புதிய சீருடையொன்று எதிர்வரும் 2026/2027ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இதனுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்காக நவீன வசதிகளுடன் கூடிய 15 மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்துச் சமூகமயமாக்கும் நடவடிக்கைகளுக்காகச் சேனபுர மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 180 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது







