கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு

101
0
Spread the love

கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பெறும் பயிலுநர் ஆசிரியர்களின் நிதிச் சுமையை இலகுபடுத்தும் நோக்கில், அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 20,000 ரூபாவாக உயர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, மாணவர்களுக்கான பல்வேறு கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படவுள்ளதுடன், சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக வழங்கப்படும் பாடசாலை சீருடைகளை எதிர்வரும் வருடத்திலும் தொடர்ந்தும் தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here