அஸ்வெசும பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோருக்குச் சமூர்த்தி வங்கி ஊடாக சலுகைக் கடன்

104
0
Spread the love

கிராமிய தொழில்முயற்சிகளை வலுவூட்டுவதற்கும் அஸ்வெசும திட்டப் பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உதவும் வகையில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழில்முயற்சியாளர்களுக்குச் சமூர்த்தி வங்கி ஊடாக அதிகபட்சம் 5 மில்லியன் ரூபாய் வரை கடன் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தச் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த கடன்களைக் குறைந்தபட்சம் 4 சதவீத வருடாந்த வட்டி வீதத்தின் கீழ் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வட்டி நிவாரணம் வழங்குவதற்காக 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒட்டுமொத்தமாக 5,000 மில்லியன் ரூபாய் அளவிலான சலுகைக் கடன்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here