கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேரை நவம்பர் 26 வரை விளக்கமறியலில்

76
0
Spread the love

நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை முன்றலில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேர் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கஸ்ஸப தேரருடன் மேலும் மூன்று தேரர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜாங்கனயே சத்தாரதன தலைமையிலான குழுவினருடன் போராட்டக் களத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here