சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தின் இன்றைய தினத்திற்கான (13) அமர்வுகள் காலை 9.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இன்றைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முதலாவது நாள் அமர்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







