முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல். பீரிஸ், லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பாணைக்கு அமைவாக, இன்று (20) காலை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் அவர் முன்னிலையானார். இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக அதிகாரிகளால் அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
வெளிவிவகார அமைச்சராக அவர் பதவியிலிருந்த காலத்தில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.







