திருகோணமலையில் ஆசிரியர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

110
0
Spread the love

திருகோணமலை அபேயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவன் ஒருவனால் ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், கல்விச் சமூகத்தின் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஆசிரியர்கள் இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகத் தாக்கப்பட்ட ஆசிரியர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து திருகோணமலைப் பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், பாடசாலைகளில் ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறும் செயற்பாடுகளைக் கண்டித்து சக ஆசிரியர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here