2027 வரவு செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதம் இன்று ஆரம்பம்

54
0
Spread the love

நாட்டின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த வியாழக்கிழமை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (14) காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முடிவில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு) நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு, இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here