கொழும்பில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை

35
0
Spread the love

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்டறிந்து அவற்றை விரைவாக அகற்றுவதற்கான தீவிரக் கவனத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளது. சுமார் 30 முதல் 40 ஆண்டுகளாகத் தொடரும் இவ்வாறான முறையற்ற கட்டுமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது, கொழும்பு நகரின் நீர் வழிந்தோடும் வடிகாலமைப்பு முறை மற்றும் கழிவு அகற்றும் செயற்பாடுகள் போதியளவில் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர், வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், அவற்றிற் கான திட்டங்களை அரசாங்கத்தின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீண்டும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாளாந்தம் உருவாகும் திண்மக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் மேலாண்மை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here