ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் அரசாங்கம் உறுதி

38
0
Spread the love

முன்னைய அரசாங்கங்கள் ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் பாதுகாப்பு வழங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதில் தனது அரசாங்கம் உறுதியாகச் செயற்படும் எனத் தெரிவித்துள்ளார். 37ஆவது கார்த்திகை வீரர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனிமேல் எவரும் மோசடி செய்பவர்களைப் பாதுகாக்க முடியாது எனவும், அரசியல் இலாபத்திற்காக இனவாதம் மற்றும் மதவாதத்தைப் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாட்டின் எதிர்காலம் அறிவிலும் தொழில்நுட்பத்திலும் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு முயற்சிகள் அரசாங்கத்தின் அரசியல் பலத்தின் வெளிப்பாடே எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here