நுவரெலியா – தலவாக்கலை (A7) பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தொன்றும், எதிர் திசையில் நுவரெலியாவிலிருந்து அக்கரபத்தனை நோக்கிச் சென்ற பேருந்தொன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளன. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







