நக்கிள்ஸ் குகைக்குள் இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்கப்பட்ட சிறுமி விவகாரத்தில் அமைச்சர் உத்தரவு

67
0
Spread the love

ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல்போன 15 வயது சிறுமி ஒருவர் நக்கிள்ஸ் மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றில் இரண்டு மாதக் குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சிறுமியின் எதிர்கால நல்வாழ்வை உறுதி செய்யத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி பவுல்ராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய இளைஞர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான சூழலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here