இலங்கைக்கு வடகிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக’ வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து சுமார் 640 கி.மீ தூரத்தில் வடகிழக்கே நிலைபெற்றுள்ள இந்தத் தொகுதியானது இலங்கையிலிருந்து விலகிச் சென்று புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையில் இன்று முதல் சிறிது குறைவடையக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.






