7000 புதிய மருத்துவர்கள்

45
0
Spread the love

அரச வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அதாவது 2027, 2028 மற்றும் 2029 ஆகிய ஆண்டுகளில் சுமார் 7,000 புதிய மருத்துவர்களை சுகாதார சேவைக்கு இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரத்துறையின் பணியாளர் கட்டமைப்பில் (Cadre) எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதில் தடைகள் காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில் விஞ்ஞானபூர்வமான பணியாளர் கட்டமைப்புப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் உள்ள மருத்துவ பீடங்களில் தற்போது சுமார் 12,000 மாணவர்கள் மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here