தென்கிழக்கு வங்கக்கடலில் தாழமுக்கம் உருவாக்கம் மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடிப்பு

82
0
Spread the love

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாறியுள்ளதைத் தொடர்ந்து, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலையில் இருந்து சுமார் 600 கி.மீ. தூரத்தில் வடகிழக்கு திசையில் நிலைபெற்றுள்ள இந்தத் தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என்பதால், மறு அறிவித்தல் வரை மீனவர்களும் கடல்சார் சமூகத்தினரும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here