சுமார் 4 கோடியே 38 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 4 கிலோகிராமிற்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்ப நிபுணரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் இருந்து மலேசியா ஊடாக விமானம் மூலம் வருகை தந்த சந்தேக நபர், தான் கொண்டு வந்த உடமைகளிலுள்ள வெளிநாட்டு மதுபானப் பெட்டிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து எடுத்துவந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.







