சபாநாயகர் தலைமையில் இன்றைய நாளுக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து முற்பகல் 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2027ஆம் ஆண்டுக்கான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள்) இடம்பெறவுள்ளது.







