லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை திடீரென உயர்த்தப்பட்டமை தொடர்பில் உரிய விளக்கமளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்காக லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இன்று காலை அதிகார சபைக்கு வருகை தந்துள்ளது. கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் வீட்டு பாவனை எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாவாலும் திடீரென உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் கப்பற் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என லாஃப்ஸ் நிறுவனம் தரப்பில் முன்னர் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







