ஏற்கனவே கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் சிறைச்சாலை பேருந்தில் பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் முரண்பாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்ற சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த நீதிமன்ற ஆஜர்படுத்தல் இடம்பெற்றுள்ளது.







