அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளால் காலநிலை மாற்றங்கள் மற்றும் மழைவீழ்ச்சி நிலைமைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதை அடுத்து, குடிநீர், மின்சாரம், உணவுத் தேவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான எதிர்கால எதிர்வுகூறல் அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.







