வீதி விபத்துக்களைக் குறைத்து சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், சாரதிகள் மது போதையில் வாகனம் செலுத்துவதைத் தடுப்பதற்கான ‘NEXA’ எனும் புதிய நவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்பை பதுளை பாரதி மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் பயிலும் மாணவன் எஸ் தினிப்ஷான் அறிமுகப்படுத்தியுள்ளான். 2026 ஆம் ஆண்டுக்கான வணிக மற்றும் முயற்சியாண்மை திறன் மதிப்பீட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ள இந்த அமைப்பு, ESP32 மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் ஆல்கஹால் சென்சார் ஆகியவற்றின் ஊடாகச் சாரதியின் சுவாசத்தில் உள்ள மதுசாரத்தின் அளவைக் கண்டறிந்து, ஆண்ட்ராய்டு செயலி மூலம் நேரடியாக எச்சரிக்கைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.







