மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நேற்று (17) திறக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி பூஜைகளுடன் திறக்கப்பட்ட இக்கோயிலில் முதல் நாளில் 30 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தினசரி 80,000 பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மங்கள இசை மற்றும் பக்தர்களின் சரண கோஷத்தால் சன்னிதானம் களைகட்டியுள்ளதுடன், புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக்கொண்டு பூஜைகளை ஆரம்பித்துள்ளனர்.







