கொழும்பு, நவம்பர் 18, 2026:
தீவிரமடையும் அக்வான் சூறாவளி – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் நிலைகொண்டுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து வருவதை அடுத்து, திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இப்புயல் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் வலுவான சூறாவளியாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாகக் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







