2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (18) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள காரணத்தால் ருஹுணு பல்கலைக்கழகம் மட்டும் இப்போராட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஏனைய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இப்பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதுடன் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.







