புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, கடல் மார்க்கமாகத் தங்கக் கடத்தலில் ஈடுபட முயன்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது மூன்று கிலோகிராமுக்கும் அதிகமான தங்கம் மற்றும் ஒரு டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இவர்களிடமிருந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







