ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை தொடர்பான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (18) எடுத்துக்கொள்ளப்பட்டது. இலஞ்ச ஆணைக்குழுவால் ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்று நீதவான் உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.






