முறையற்ற வெளிநாட்டுக் கடவுச்சீட்டைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அவர் சமர்ப்பித்த மேன்முறையீட்டை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், திறந்த நீதிமன்றத்தில் ஆஜரான சஷி வீரவங்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.







